இலங்கையில் சமத்துவமாக தடுப்பூசி வழங்குதல் சார்ந்த பல்வேறுபட்ட தாக்கங்கள்

கோவிட்-19, உலகெங்கிலும் உள்ள பல்வேறு இனக்குழுக்களிடையே தடுப்பூசிகளை அணுகுதல் மற்றும் நம்பிக்கை வைத்தல் தொடர்பில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. வெரிடே ரிசர்ச் ஆனது, இலங்கையில் உள்ள சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூன்று இனக்குழுக்களிடையே கோவிட்-19 தடுப்பூசி மீதான நம்பிக்கை, அதைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் அணுகல் குறித்து பகிரப்பட்ட சமூக ஊடக கருத்துக்களை பகுப்பாய்வு செய்யும் முகமாக ஒரு ஆய்வை நடத்தியது.

சர்வதேச சிறுபான்மை உரிமைகள் குழு இந்த ஆய்வுக்கு நிதிப் பங்களிப்புச் செய்தது. பல்வேறு இனக்குழுக்களிடையே தடுப்பூசி மீதான நம்பிக்கையின் அளவு, அதை பெற்றுக் கொள்ளல் மற்றும் அணுகுதல் என்பனவற்றைப் புரிந்துகொள்வதற்கு சமூக ஊடகங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைக் கண்டறிவதே இவ் ஆய்வின் நோக்கமாகும்.