ஏப்ரல் மாத முட்டாள்கள் தினத்திலும் ஏனைய நாட்களிலும் ஏமாறாமல் இருப்பதற்கு மூன்று எளிய வழிமுறைகள் இதோ!

நிறுத்திக்கொள்ளல்

“இந்த செய்தியை நான் ஏன் நம்ப வேண்டும்?”
என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் (ஏப்ரல் மாத முட்டாள்கள் தினத்தில் மட்டுமன்றி, தினமும் அவ்வாறு சிந்தியுங்கள்)

பின்தொடர்தல் 

குறித்த வெளியீட்டை உருவாக்கியவரின் பக்கத்திற்கான இணைப்பிற்குச் செல்லுங்கள். (அவ்வாறான ஓர் இணைப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? ஆனாலும் அந்த வெளியீட்டை நீங்கள் நம்புகிறீர்களா? மீண்டும் உங்களுக்கு ஏப்ரல் மாத முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!)

சரிபார்த்தல்

குறித்த செய்தியை வெளியிட்ட வலைத்தளம் அல்லது சமூக ஊடகப் பக்கம் நம்பகரமானதா? (ஏப்ரல் மாத முட்டாள்கள் இவ்வாறான விடயங்களை “நிறுத்திக்கொள்வதுமில்லை”, “பின்தொடர்வதுமில்லை”, “சரிபார்ப்பதுமில்லை”. ஏப்ரல் மாத முட்டாளாக நீங்கள் இருந்து விடாதீர்கள்)

நிறுத்திக்கொள்ளல்

“இந்த செய்தியை நான் ஏன் நம்ப வேண்டும்?”
என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் (ஏப்ரல் மாத முட்டாள்கள் தினத்தில் மட்டுமன்றி, தினமும் அவ்வாறு சிந்தியுங்கள்)

பின்தொடர்தல் 

குறித்த வெளியீட்டை உருவாக்கியவரின் பக்கத்திற்கான இணைப்பிற்குச் செல்லுங்கள். (அவ்வாறான ஓர் இணைப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? ஆனாலும் அந்த வெளியீட்டை நீங்கள் நம்புகிறீர்களா? மீண்டும் உங்களுக்கு ஏப்ரல் மாத முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!)

சரிபார்த்தல்

குறித்த செய்தியை வெளியிட்ட வலைத்தளம் அல்லது சமூக ஊடகப் பக்கம் நம்பகரமானதா? (ஏப்ரல் மாத முட்டாள்கள் இவ்வாறான விடயங்களை “நிறுத்திக்கொள்வதுமில்லை”, “பின்தொடர்வதுமில்லை”, “சரிபார்ப்பதுமில்லை”. ஏப்ரல் மாத முட்டாளாக நீங்கள் இருந்து விடாதீர்கள்)

வெரிட்டே ரிசர்ச் வழங்கும் Trace-it (டிரேஸ்-இட்) ஐ அறிமுகப்படுத்துகிறோம்.

வெரிட்டே ரிசர்ச் தனது டிஜிட்டல் ரீதியான வெளியீடுகளுக்கு ஒரு புதிய வெளியீட்டுத் தரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளியீட்டின் உள்ளடக்கம் எங்களுடையதாக இருந்தால், அது நாங்கள் அதனை வெளியிட்ட இடத்துடன் இணைக்கக் கூடிய ஒரு QR குறியீட்டைக் கொண்டிருக்கும். 

நம்பகமான வெளியீட்டாளர்கள் அனைவரும் இவ்வாறு செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்; ஏனெனில், பின்தொடர்ந்து சரிபார்க்க முடியாத வகையில் வெளியிடப்படும் உள்ளடக்கங்கள் போலியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 

வெளியீட்டாளர்களைப் பின்தொடர்ந்து கண்டறிய முடியாத வெளியீடுகளை நீங்கள் காண நேர்ந்தால், ​​எச்சரிக்கையாக இருங்கள். அதை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சுகாதாரமற்ற நடத்தையைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். 

Take the quiz to test your skills!

Real or Fake Quiz
See if you can tell which of these stories are true, and which are fake.

Question 1

Post 1

Question 2

Post 2

Question 3

Which post is real?

Left Post

Option A

Right Post

Option B

Quiz Complete!

Thanks for playing the Real or Fake Quiz. You can now see your results below.

QR-அடிப்படையிலான வெளியீட்டாளர் கண்காணிப்புக் குறியீட்டை நிறுவுவதில் வெரிட்டே ரிசர்ச் முன்னோடியாகத் திகழ்கின்றது

டிஜிட்டல் உள்ளடக்கங்களின் வெளியீட்டாளர்சார் அங்கீகாரத்தை ‘டிரேஸ்-இட்’ (Trace-it) வழங்குகிறது

தற்போதைய AI கருவிகளால் எந்தவொரு வெளியீட்டையும் குறிப்பிடத்தக்க வகையில் எளிதாக மீளுருவாக்கவும், சிதைக்கவும் முடியும். இது பகிரப்பட்ட வெளியீடுகளின் மீதான நம்பிக்கையற்ற கண்ணோட்டத்தை மேலும் வலுவூட்டுகின்றது. தாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பது திரிபுபடுத்தப்பட்ட AI சார்ந்த மறுவுருவாக்கம் அல்ல என்பதை பார்வையாளர்கள் எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வார்கள்? 

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு பிரிவான வெரிட்டே மீடியா, ‘ட்ரேஸ்-இட்’ (Trace-it) எனப்படும் ஓர் எளிமையான QR குறியீடு அடிப்படையிலான வெளியீட்டு முறையை முன்னெடுத்துள்ளது. ஒரு டிஜிட்டல் கைரேகையாக விளங்கும் இது, குறிப்பிட்ட வெளியீட்டின் உண்மையான மூலாதாரத்தை அணுகுவதற்கு வழிவகுப்பதோடு அதன் நம்பகத்தன்மையை உடனடியாக சரிபார்ப்பதற்கு ஊடக பயனர்களுக்கு உதவுகிறது (கீழே உள்ள வரைபடத்தைப் பார்க்கவும்).  

நம்பிக்கைக்குரிய வெளியீட்டாளர்கள் இந்த முறையை ஒரு வெளியீட்டுத் தரமாக ஏற்றுக்கொள்ளும்போது, அனைத்து நம்பகமான டிஜிட்டல் முறையிலான உள்ளடக்கங்கள்/வெளியீடுகளின் உண்மையான வெளியீட்டாளர்களை அணுகுவதற்கு ஏதுவாக அமைவதோடு, திரிபுபடுத்தப்பட்ட வெளியீடுகளின் பரவல் கண்டறியப்பட்டு குறைக்கப்படும் என வெரிட்டே மீடியா குழுவின் தலைவர் தீபாஞ்சலி அபேவர்தன விளக்கியுள்ளார். 

ஏப்ரல் மாதம் முதல், வெரிட்டே ரிசர்ச் மூலம் டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் உருவகப்படுத்தப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட அனைத்து வெளியீடுகளிலும்டிரேஸ்-இட்‘ QR குறியீட்டின் டிஜிட்டல் கைரேகை காணப்படும். 

இந்தப் பொதுப்படுத்தப்பட்டடிரேஸ்-இட்தரநிலையை ஏற்றுக்கொண்டு பயன்பெறுமாறு அனைத்து நம்பிக்கைக்குரிய வெளியீட்டாளர்களையும் வெரிட்டே மீடியா ஊக்குவிக்கிறது. இந்த எளிய அங்கீகார முறையை செயற்படுத்துவது தொடர்பில் உதவி கோரும் நம்பகமான வெளியீட்டாளர்களுக்கு உதவ தயாராக உள்ளதாக, வெரிட்டே மீடியா குழுவின் செயற்திட்டத் தலைவர் றொஷல் கனகசபை உறுதிப்படுத்தியுள்ளார். 

பதிப்பாளரின் உண்மையான வெளியீட்டுப் பக்கங்களைக் கண்டறிய முடியாத வெளியீடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் ஊடகப் பயனர்களை வெரிட்டே மீடியா கேட்டுக்கொள்கிறது. ஏனெனில் அவ்வாறான வெளியீடுகள் பெரும்பாலும் திரிபுபடுத்தப்பட்டவையாகவோ அல்லது போலியானவையாகவோ இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய வெளியீடுகளை பகிர்வது போன்ற ஆரோக்கியமற்ற நடத்தைகளைத் தவிர்க்குமாறு ஊடகப் பயனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

டிரேஸ்-இட்என்பது வெரிட்டே மீடியாவின் பொறுப்புடன் கூடிய பகிர்வு மற்றும் தகவல் சரிபார்ப்பை ஊக்குவிப்பதற்கான பரந்த அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். வெரிட்டே மீடியா என்பது, உலகை மறுவடிவமைக்கும் வகையில் அறிவுசார் கண்ணோட்டத்துடன் பல்துறை அடிப்படையில் இலங்கையை தளமாகக் கொண்டுள்ள ஒரு சிந்தனைக் குழுவான வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு பிரிவாகும். 

மேலதிக தகவலுக்கு, mediaservices@veriteresearch.org மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.   

எங்கள் வலைத்தளங்களைப் பார்வையிடுங்கள்