2021 வரவு செலவுத்திட்டம் குறித்த பொது அறிக்கை

அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு (COPF) வழங்கப்பட்ட ஆணையின் பிரகாரம் இந்த பொது அறிக்கையானது வெறிட்டே ரிசர்சினால் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது வரவு செலவுத்திட்டத்தின் மதிப்பீடுகளில் பயன்படுத்தப்பட்ட நிதி, நிதிசார் மற்றும் பொருளாதார அனுமானங்கள் பற்றிய பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடுகளை வழங்குகின்றது. இவ்வறிக்கையானது பாராளுமன்றம், அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) உட்பட பரந்துபட்ட பங்குதாரர்களை அறிவுருத்துவதை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வருடாந்த வரவு செலவுத்திட்டம் சம்பந்தமாக காத்திரமான ஈடுபாட்டை பாராளுமன்றத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகரிக்க இந்த அறிக்கையின் உள்ளடக்கம் உதவும் என வெறிட்டே ரிசர்ச் நம்புகின்றது.